மீட்டிய வீணையில் - உன்
விரல்கள் பட்டதும்....
இசையின் வடிவம் மாறியது.
அதில் ஒரு இனிமை - என்
இதயத்தில் படர்ந்தது.
இசையின் எல்லைவரை.....
நம் காதல் செல்லும்வரை....
உறவில் பிரிவில்லை.....!!
வீணை வடிவில் நீ..... இருந்தால்
மீட்டும் கலைஞனாய் நானிருப்பேன்.
மீட்டும் கலைஞனாய் நீ..... இருந்தால்
ரசிக்கும் ரசிகையாய் நானிருப்பேன்.
இசையில் வடிவில் நீ..... இருந்தால்
இசைப் புயலாய் நானிருப்பேன்.
இசைப் புயலாய் நீ..... இருந்தால்
கவிப் புலவராய் நானிருப்பேன். .
தெய்வச்சிலையால் நீ..... இருந்தால்
சாமியாராய் நானிருப்பேன்.
சாமியாராய் நீ..... இருந்தால் - நல்ல
பக்த்தனாய் நானிருப்பேன்.
பக்த்தனாய் நீ..... இருந்தால்
பிச்சைக் காரனாய் நானிருப்பேன்.
பிச்சைக் காரனாய் நீ..... இருந்தால்
தட்டில் இடும் வெள்ளிக்காசாய் நானிருப்பேன்.
வைத்தியராய் நீ..... இருந்தால்
வியாதிக்காரனாய் நானிருப்பேன்.
வியாதிக்காரனாய் நீ..... இருந்தால்
ஊசி போல நானினுப்பேன்.
ஊசி போல நீ..... இருந்தால்
ஊரை விட்டே ஓடியிருப்பேன்.
ஊரை விட்டு நீ.... ஓடியிருந்தால் - இந்த
உலகை விட்டே ஓடியிருப்பேன்
உங்கள் அபிசேகா.
- abisheca's blog
- Login or register to post comments

