கருவறையில் இருந்தபடி
தாய் மண்ணை சுவாசித்தேன்.
தொல்லைகள் தொடர்ந்தது
கருவறையில்...
சொந்த அன்னையை இழந்தது
இதுவரையில்....
வானமும் சாட்சி இல்லை... இந்த
பூமியும் சாட்சி இல்லை.
பத்து மாதம்....
கருவறை கூட
எனக்கு சொந்தம் இல்லை.
எட்டு மாதத்...தால்
எட்டிப் பார்த்தேன்.
என் தாய் கண் திறக்கவில்லை
வீடும் சாட்சி இல்லை....இருந்த
விடுதியும் சாட்சி இல்லை.
தேடிப் பார்த்த....
உறவு கூட
எனக்கு சொந்தம் இல்லை.
ஏழை என்னை
கட்டிக் காக்க..
யாரும் முன் வரவில்லை.
உதிரமும் சாட்சி இல்லை_என்
உருவமும் சாட்சி இல்லை
படிக்கப் போக
பாதை இல்லை
பார்த்துப் பேச யாருமில்லை.
முற்கம்பி நடுவே
முடியப் போகுது
என் போன்ற மகவின் வாழ்க்கை.
உங்கள் அபிசேகா.
- abisheca's blog
- Login or register to post comments

