தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நினைப

யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின்

தமிழர் பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம். புலிகளை நொண்டிச்சாட்டாக வைத்து இதிலிருந்து விலகிவிட முடியாது என வலியுறுத்துகிறோம்.தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டே சட்ட மூலங்கள் ஊடாக நாட்டை இராணுவ மயமாக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது.

இராணுவ மயமாக்கலின் மூலம் நாட்டை தொடர்ந்தும் பீதிக்குள் வைத்திருக்கவே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சபையில் குற்றம் சாட்டியது.

தமிழர் பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம். புலிகளை நொண்டிச்சாட்டாக வைத்து இதிலிருந்து விலகிவிட முடியாது என வலியுறுத்துகிறோம்.

அத்துடன் தமிழர் பிரச்சினையை இராணுவரீதியில் தீர்த்து விடலாம் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். இந்த முட்டாள் தனமான சிந்தனைகள் மேலும் ஒரு போராட்ட அமைப்பை உருவõக்கவே வழிவகுக்கும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் தெரிவித்ததாவது:

பாதுகாப்பு பணியாட் தொகுதிக்கான தலைமை அதிகாரி என்ற புதியதொரு பதவியை உருவகித்து அந்த பதவியில் அமர்த்தப்படுபவருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த சட்ட மூலத்தின் நியாயத் தன்மைகளைப் பார்க்கும் போது ஏன் இவ்வாறு கொண்டுவரப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது.

பிறபகுதிகளில் இருந்து இந்நாட்டுக்கு எதிரிகள் இல்லை. நாட்டுக்குள்ளேயே அரசாங்கத்திற்கு எதிரிகள் இருந்ததாக கருதப்பட்டது. அதுவும் தற்போது முடிந்துவிட்ட கதையாகி விட்டது.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நினைப்பாக இருக்கின்றது. அதனாலேயே இந்த சட்டமூலமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

User login

Who's online

There are currently 0 users and 31 guests online.

Syndicate

Syndicate content