மரத்தடி ஞானம்
நிம்மதியில்லா வெயில்சூழ்ந்த வாழ்க்கை பாதையில்
நிம்மதியின் நிழல்களை தேடினேன்
நிழலென்று நின்ற இடமெல்லாம்
நிலையிழந்து தவித்தேன்
வழிவந்த வழிப்போக்கரிடமெல்லாம்
வழியில் நிழலுண்டோ என கேட்டேன்
ஆளுக்கொரு வழி காட்டினர்
அங்கு செல் இங்கு செல் என்று
நீடித்த வழியில்
நிழல் என்று ஒதுங்கி«ன்ன சில இடத்தில் - எனினும்
இடையிடையே வெயில் வாட்டியது
வெந்து உருகி உடைந்தோர்
மரத்தடியில் அமர்ந்தேன்
துன்பம் துயரம் அழுகை கண்ணீர்
கவலை - இதுதான் வாழ்க்கையா?
வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா?
கடவுளிடம் கேட்க மேல்வானம் பார்த்தேன்
இறைவனில்லை இலையுதிர்ந்த மரக்கிளைகள் தான் தெறிந்தன
"சட்" என்று என்சிந்தையில் பட்டது
வளமான ஒரு வாழ்க்கை தத்துவம்
"ஓ" இது இலையுதிர் காலம் - இந்த
இலையுதிர் காலம் கழிந்து நிச்சயம்
வாழ்க்கைக்கும் ஓர் வசந்த காலம் வரும்.
ஞானம் பெற்று எழுந்து நடத்தேன்
வாழ்க்கையின் வசந்தகாலத்தை தேடி!
மரத்தடி ஞானம்
| கவிதை எங்கள் மூச்சு |

