உலகளாவிய இலட்சியவாதிகளே

உலகளாவிய இலட்சியவாதிகளே

மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி. பிறந்து, வளர்ந்து, சந்ததியை பெருக்கிய பின் மாண்டுபோகும் விலங்கு அல்ல மனிதன்.
ஏதோ ஒன்றில் சாதிக்கவேண்டும். இது பிறவிக்குபிறவி மனித மனதுள் எழும் உத்வேக
உணர்ச்சி., பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு லட்சிய வேட்கையோடு தான் மனிதன் நாட்களை நகர்த்துகிறான்.
பிறந்து தாயின் முலைகாம்பில் பால்குடிக்கும் முதல்துடிப்பு முதல் விசித்திரம், விளை யாட்டு, கல்வி, கலை, காதல், குடும்பம், விவசாயம், வியாபாரம், தொழில், அரசியல் ஆன்மீகம், அறிவியல், தத்துவம், போராட்டம், தீவிரவாதம் என ஏதோ ஒன்றில் ஐக்கியப் பட்டு இலட்சியவாதியாய் இல்லாத மனிதன் யாருமே இருக்க முடியாது.
ஏதோ ஒரு இலட்சிய வேட்கை மனித மனதுள் எப்போதும் குடிகொண்டிருக்கும். அது இல்லாமல் மனிதனே இல்லை எனலாம். அதனால்தான் சொன்னேன் மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி என.
எனவே உலகளாவிய மனிதர்களை மனிதர்கள் என்பதை விட இட்சியவாதிகள் என்றே அழைக்கிறேன்.
உலகளாவிய இலட்சியவாதிகளே
வரலாறு தெறிந்த 21ம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்டோம். நமது சாதனை பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.
எத்தனை அடி, அழிவு, கண்ணீர், கவலை, போராட்டங்கள், போராடிப் போராடித்தானே இந்த இலக்கை அடைந்திருக்கிறோம். பூகம்பம், நிலநடுக்கம், புயல், எரிமலை, கடல்
கொந்தளிப்பு, அனல்காற்று, அடைமழை, இன்னும் அரக்க விலங்குகள், உயரிகொல்லி
உயிர்கள், என எத்தனை எத்தனையோ இயற்கை அழிவுகள், கூடவே நமக்குள்ளேயே போட்டி,பொறாமை,போர்,வன்முறை எனநாமே ஏற்படுத்திக்கொண்ட செயற்கைஅழிவுகள்.
இந்தனையோடும் கணத்துக்கு கணம் போராடிப் போராடித்தனே இந்த வியத்தகு விஞ்ஞான உலகுக்குள் வந்திருக்கிறோம்.
செவ்வாய் கிரகத்தில் நாம் வாழமுடியுமா, நமக்கு தேவையான பொருளாதாரம் அங்கு உண்டா, இன்று தேடிக்கொண்டிருக்கிறோம்.
இணையதளத்தில் உலகை இணைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் உடனுக்குடன் விருந்து படைக்கிறோம். உலகில் எங்கு என்ன நடந்தாலும் நேரடித் தொலை காட்சி காண்கிறோம். எங்கு எத்தனை தொலைவில் இருந்தாலும் ஒருவொருக் கொருவர் செல்லில் பேசிக்கொள்கிறேம்.
உடல் புலன்களை அடக்கி உடலுக்கு அப்பால் உள்ள அறிவுலகம் நோக்கி தியானிக்க கற்றிருக்கிறோம். இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ புதுமைகள்.
எதற்காக எல்லாம்?
நமக்காக! நமது வாழ்க்கையின் எளிமைக்கும், இனிமைக்கும் வேண்டி இன்னும் இன் னும் இயற்கையை நம்வசம் வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
செயற்கைகோள், இணையம், செல்பேசி, தியானம், பக்தி, அரசியல், ஆகாயஉலா, என எல்லாம் சரி; ஆனால் எதற்காக படைத்திருக்கிறோம் பேரழிவு அணு ஆயுதங்களை?
எந்தனையோ லட்சியங்கள், இலட்சிய வெற்றிகள், எல்லாம் சரி; ஆனால் இந்த அணு ஆயுதங்களின் இலட்சியம் என்ன?
நம்மை பாதுகாத்து, நமது சந்ததிகள் வழிவழியாய் இன்புற்று வாழத்தான் இந்த பேரழிவு ஆயுதங்களா?, அல்லது நம்மோடு நம்சந்ததியும் கூடவே உயிரின சரித்திரமும் அடி யோடு அழிந்து போக ஏற்படுத்திக்கொண்ட இலட்சியங்களா?

கொஞ்சம் சிந்தியுங்கள்.....

English to Tamil converter

Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய

Type your text here See your results here
The vowels:
a aa, A i ee, I u oo, U
e ae, E ai o oa, O au
Ahh, H
The Consonants:
g, k, kh, c க் nG ங் ch ச் j ஜ் nY ஞ்
d, t ட் nN ண் dh, th த் N ந் n ன்
b, bh ப் m ம் y ய் r ர் R ற்
l ல் L ள் zh ழ் v, w வ்
sh ஷ் s ஸ் h ஹ் f ஃப்

Letters like g and k represent the same thamizh letter. So, "akhilaa", "akilaa", "agilaa", "acilaa" all give "அகிலா"

To get the complete syllable, suffix it with an "a". For eg., "pa" is "ப".

For half syllables, stop with the code for that syllable alone. For eg., "zh" is "ழ்". The general rule of thumb is that with two touching syllables, the former syllable is a half syllable. So, "chcha" is "ச்ச". The syllable "ங்" has to be typed out as "ng" and it is usually followed by a "k". As in, "thangkai" "தங்கை".

Some examples

vijay விஜய்
vidhyaa வித்யா
lathaa லதா
latchumiNaaraayanNan லட்சுமிநாராயணன்
akhilaa அகிலா
pirathaap பிரதாப்
bharath பரத்
kirushnNaswAmi கிருஷ்ணஸ்வாமி

Contact: liyer.vijay@gmail.com

The code this site uses is here. It is free for use.