தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

குழந்தையும் தெய்வமும்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

அறிய வேண்டியவற்றை அறிய வல்ல மக்கட்பேற்றை விட ஒருவன் பெறத்தக்க பேறுகளில் சிறந்ததெதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்கிறார் திருவள்ளுவர்.

உலகில் மானிடராய் அரிதாய்ப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் பேரின்ப வாழ்வைத் தருவது நமது குழந்தைகளே. அத்தகைய நமது பிள்ளைகள் நம்மை விட அறிவிற் சிறப்புற்று விளங்குவது வாழ்வை மேலும் இனியதாக்கும்.

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது

இயந்திரமயமான நம் வாழ்வில் இன்பமதை அள்ளி வழங்குவதுடன் நாம் வயது முதிர்ந்து ஓய்வெடுக்க வேண்டிய தருணத்தில் நம்மைத் தாங்கி நிற்கும் நம் குழந்தைகள் என்றென்றும் நம் தெய்வங்களாகப் போற்றி மகிழ்ந்து வழிபடத் தக்கவர்கள்.

குழந்தைகள் உலகில் எல்லா நலங்களும் பெற்று நம்மை விடவும் சிறந்து வாழ வழிகாட்டுவது பெற்றோரின் தலையாய கடமையாகும். இக்கடமையைத் தியாகம் என்று கூறுவது அறியாமை. அவர்களது திறமைகளை வளர்த்து, அவர்கள் எல்லாவிதத்திலும் தன்நிறைவு பெற்று, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுடன் உலகிலுள்ள பிறருக்கும் உதவி செய்து, உலகை இன்பமானதாய் அமைக்க ஏற்றவாறு அவர்களை வழி நடத்துவது நம் தலையாய கடன்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

நாமும் நம் குழந்தைகளும் வாழும் உலகம் இன்பமுடையதாகவும், அமைதியான சூழலைப் பெற்றதாகவும் அமைய நாம் சமூகத்துடன் இயைந்த வாழ்வு வாழ்வது மிக இன்றியமையாதது. அதேபோல் நம் குழந்தைகளும் சாதி மத பேதமற்ற சமுதாயச் சூழலை உருவாக்கப் பாடுபடுதல் அவசியம் என்பதை உணர்த்த வேண்டும்.

குழந்தைகள்தான் நம் அனைவரது எதிர்கால வாழ்வை வழிநடத்தும் தலைவர்களாக உருவாகின்றனர். நாம் கற்றறிந்தவற்றையும், அனுபவம் மூலம் உணர்ந்தவற்றையும் அவர்களது வாழ்வை வளப்படுத்தத் தக்க வகையில் நமது குழந்தைகள் அனைவருக்கும் எடுத்துக் கூறுவதும், அவர்களுக்கேற்ற விஷயங்களை அவர்கள் பார்வைக்கு வைப்பதும் அவர்கள் நலனில் அக்கரை கொண்டவர்கள் செய்ய வேண்டிய சேவை. அத்தகு சேவையை மனதிற்கொண்டு உருவாக்கப் பட்டுள்ள எனது எளிய இனிய இணையதளம்
மழலைகள்.காம் ஆகும்.
குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்ட அனைவரையும் இப்புனித சேவையில் பங்கு கொள்ள அழைக்கிறேன், ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்.

அன்புடன்
ஆகிரா

User login

Who's online

There are currently 0 users and 26 guests online.

Syndicate

Syndicate content