அனைவருக்கும் வணக்கம்!!! தினம் தினம் பல்வேறுபட்ட பேரறிஞர்கள், இலக்கிய வல்லுனர்கள், மேதைகள், எழுத்தாளர்கள் எழுதுகிற எழுத்துக்களைப் படிக்கின்ற தமிழ் மக்களின் மனங்களுக்கு இடையில் நான் வாசிக்கும் அல்லது எழுதும் எமது எழுத்துக்களையும் உலாவர ஆசைப்படுகிறேன். எனக்கும் தமிழின் மீது கட்டுக்கடங்காத காதல் உண்டு. ஆனால் எமது வேலைப்பளு காரணமாக, விரும்பும் அளவிற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக தொடர்பின்றி போன எமது இந்த “தினம் ஒரு தகவல்” பணியினை மீண்டும் தொடங்க ஆசைப்படுகிறேன்.
“ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தனவே” என்பார் தொல்காப்பியர். அது போல நான் இங்கு நான் கொடுக்கின்ற இந்த ஒவ்வொரு தகவலும் நமது முன்னேற்றத்திற்கு வெற்றிப்பாதையாக இருக்கும் என நம்புகிறேன். இதைப் பற்றி பல்வேறு நண்பர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
எமது சமீபத்திய தொடக்கமான மென்பொருள் நிறுவனம் (KAP Computer Solutions Pvt. Ltd.) மற்றும் முதன்மை அதிகாரி (Chief Executive Officer) பதவி ஏற்பு ஆகியவற்றால் கடந்த 10 மாத காலமாக எண்ணால் எமது இந்த “தினம் ஒரு தகவல்” பணியினை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. அதற்கான எமது தாழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இந்த பணி வருகிற திங்கட்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தினம் ஒரு தகவல் “ஒரு பிறவி பலமுறை வாழல்” என்ற அழகிய தலைப்புடன் தங்களை ஏந்திவர உள்ளது.
தங்களது கருத்துக்களை அவ்வப்போது எமக்கு தெரியப்படுத்தி, இந்த பணியினை மேலும் சிறப்படையச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையைய் பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
- admin's blog
- Login or register to post comments


