வணக்கம் வாணி உன் எழுத்தை படித்ததும் மகிழ்ச்சி. இது இறுதி ஆண்டு
படிப்பில் கவனம் செலுத்து. உன் சித்தப்பா எப்படி நலமா?
இவர்களுக்கு பதில் சொல்லி உன் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யதே!
1930 களிலேயே " நம்முடைய பிரச்சனை வெறும் சமூக பிரச்சனை மட்டுமல்ல அது
அரசியல் பிரச்சனையுன்கூட அதற்கு அரசியல் ஆதிகாரம் வேண்டும் அப்போதுதான்
நமக்கு விடுதலை. ஆகவே தலித்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென"
புரட்சியாளர் அறைகூவல் விடுகிறார். அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே
உனக்கு விடுதலை" என்று சொல்லி இரட்டை வாக்குரிமைக்கு
வித்டுகிறார்.இதுவும் அவர்களுக்கு தெரியும். அவர்கள் மிக
அறிவுஜீவிகள்,புத்திசொல்லவும் குறைசொல்லவும் மட்டுமே தெரிந்தவர்கள்.
தமிழக தலித் அரசியல் வரலாற்றில் இப்படியொரு எழுச்சி எப்போதுமே இல்லை.
அதற்கான பின்புலம் தோழர் திருமாவின் உழைப்பை மறைக்க முடியாது.
இதே face book -இல் தோழர் திருமாவை, மரியாதையை குறைவாக அவன் இவன்
என்றெழுதி, சின்ன கருணாநிதி என்று பகடி செய்கிறார்கள், இன்னொரு பக்கம்,
இன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கரை அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய்
சேர்த்தவர்கள் மார்சிஸ்ட் கட்சி என்று கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லாமல்
எழுதுகிறார்கள் ( இன்னமும் கீழ்சாதி மேல்சாதி என்றே எழுதுகிறார்கள் )
.1990 பிறகு தலித்கள் இன்று தங்களுகென்று ஒரு அரசியல் கட்சிகளை தெரிவு
செய்து சுயமரியாதையோடு மிக விரியமாக செயல்படுகிறார்கள். குறிப்பாக
லட்சோபலட்ச இளைஞர்கள் தோழர் திருமாவின் பின்னால் மிக நம்பிக்கையோடு
அணிதிரள்கிரார்கள். தங்கள் கட்சிகூடாரம் காலியாவது தொடர்ந்துதான் தலித்
அரசியலை கைலெடுத்தார்கள் என்பது கைசூபுகிற சிசுவிற்கும் தெரியும்.
தலித்கள் இந்த மன்னின்மைந்தர்கள் தமிழகத்தில் முதன்முதலில் அரசியல்
அமைப்பு நடத்தியவர்கள்,முதலில் தமிழில் இதழ் நடத்தியவர்கள்,தலித்
எழுச்சியை செரித்துக்கொள்ள முடியாத இடைநிலை சாதி வெறியர்கள்.அம்பேத்கரை
மார்சிஸ்ட் கட்சிதான் மக்களிடத்தில் சேர்த்தது என்று சொல்வது எவ்வளவு
மடமை. இப்படி சொல்வதன் மூலம் தலித்களுக்கு வரலாறு இல்லை என்று திரும்ப
திரும்ப சொல்லி தலித் வரலாற்றை மறைத்துக்கொண்டு வருகிறார்கள். 1898
சங்கம் வைத்து மாநாடு நடத்தியவர்கள், பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கல்வி,
தமிழிய உணர்வு, போன்ற சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்கள் தலித்கள்.
அதை யாரும் படிக்க விரும்புவதில்லை. சொந்த புத்தியில்லாமல், யாரோ எப்பவோ
எதுக்கோ சொன்னதை திருப்பி திருப்பி வந்திஎடுகிற கிளிப்பில்லைகளால் இங்கே
எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை ஆனாலும் தொடர்ந்து கூலிக்கு
மாரடிகின்றனர்.
தலித்களின் நண்பர்கள என்று சொல்லி கொள்பவர்களே தலித் வரலாற்றை
இருட்டடிப்பு செய்தார்கள். இன்னமும் அது பற்றி பேசாமல் கனத்த மௌனத்தை
கடைபிடிகிறார்கள். அங்குதான் இவர்களின் சூழ்ச்சி புரியும். தமிழகத்தில்
முதலில் சுயமரியாதை மாநாடு நடத்தியது யாரு?
இந்தி எதிர்ப்பு போரில் முதலில் உயிர் தியாகம் செய்தது யாரு? என்ற வரலாறு
பற்றி உண்மை பேச இவர்களுக்கு துணிவு இனிமேலாவது வருமா?சிதம்பரம் பத்மினி,
அந்தியூர் விஜய பாலியல் வன்கொடுமைக்கு காரணமான காவல்துறையை எதிர்த்து
போராடியவர்கள்
சென்னகரம்பட்டியில் ரெண்டு பேரை அடித்தே கொலைசெய்தார்கள், மேலவளவில்
ஆறுபேரை கழுத்தறுக்கு கொலைசெய்தார்கள், அன்றாடம் வன்கொடுமைகளை செய்யும்
சாதி வெறியர்களை, இடைநிலை சாதி வெறியர்களை எதிர்த்து போராடுவதில்லையே
ஏன் ?
தமிழகத்தில் இதுவரையில் நேரடியாக சாதி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு
போராட்டம் நடந்ததில்லை. ஆனால் சாதி ஒழிப்பு குறித்து மிக மிக அதிகமாக
வாயுபசாரமும் வெற்று சவுடாலுமே அளவுக்கு மீறி வழங்க பட்டிருக்கு. ..
வாங்க ஆதாரங்களோடு விவாதிப்போம்
Ayothidasar
- admin's blog
- Login or register to post comments


