தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

வலை பொறியில் சிக்கிய பொறியியல் மாணவர்கள் & சிக்க உதவிய பொறியியல் கல்லூரி

L IV E M Y P R O F ILE எனும் அமைப்பு 19.2.2011 மற்றும் 292.2011 ஆகிய இருநாட்களில் C H E N N A I 2011 M E G A J O B F A IR எனும் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை S R I R A M E N G IN E E R IN G C O L L E G E, V E P P A M P A T T U C H E N N A I யில் B E ( ANY DEPT)& T E C H, M C A & M B A , A R T S AND S C I E N C E, IT I & D IP L M O படித்த மாணவர்களுக்கு T O Y O T O, R E N A U LT N IS S A N, P O L A R IS L&T , P R IT H V I, H S I ,H E N K A L, N D U G R O U P B G R E N E R G Y ,G O M S, WI N W IN D LIVE MY PROFILE, D E V I P O LY M E R S PVT LTD போன்ற நிறுவனஙகளில வேலை வாங்கி தருவதற்காக நடத்துவதாகவும் ஒவ்வொரு நிறுவனமும் தலா 60 நபர்களுக்கு வேலை தரும் என உறுதி அளித்தும்,. ஒவ்வொரும் தலா ரூ200 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்றும் அவர்களது R E S U M E ஐ W W W .L IV E M Y P R O F IL E. C O M க்கு அனுப்புமாறு கேட்டு விளம்பரம் செய்தது..

இதை நம்பி BE ( ANY DEPT)& TECH, MCA & MBA , ARTS AND SCIENCE, ITI & D IPLMO முடித்த தமிழக ஆநதிரா மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் அம்பத்தூர் அண்ணாநகர் போன்ற இடங்களில் மேற்படி விளம்பரதாரர் தெரிவித்த முகவரியை தேடி கண்டு பிடித்து பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.
ஆனால் 19 .2.2011 அன்று சிறிராம் பொறியற் கல்லுரிக்கு சென்ற பல்லாயிர கணக்கான மாணவ மாணவிகள் வெகு நேரம் ஆகியும் வேலை வழங்கும் நிறுவனங்கள் என சொல்லப்பட்ட எந்த நிறுவனமும் அங்கு வராதது கண்டு தாங்கள் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்க சரியான பதில் இல்லாததால் கலாட்டா செய்து கல்லூரி உடைமைகளுக்கு சிறிது சேதம் செய்தாக கூறப்படுகிறது.
மாணவிகள் கலாட்டாவை கண்டு பயந்து உடன் பேருந்துகளை பிடித்து விட்டு வந்து விட, மாணவர்கள் மாணவிகள் சிலர் மட்டும் நுழைவுகட்டணத்தை திரும்ப பெற காத்திருந்து சுமார் 200 நபர்கள் தாங்கள் செலுத்திய நுழைவு கட்டணம் ரூ200 ஐ திரும்ப பெற்று வந்துள்ளார்கள். மற்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் பணத்தை மேற்படி நிறுவனம் கொள்ளை அடித்து விட்டது. இதற்கு சிறி ராம் பொறியற் கல்லூரி எந்தளவுக்கு உடந்தையாக இருந்து உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் தொலைகாட்சியிலும் சிறிராம் பொறியற் கல்லூரி வேப்பம்பட்டு -ன் பெயர் வராமல் பார்த்து கொண்ட அந்த கல்லூரி நடத்தை சந்தேகமாக உள்ளது.

இந்த செய்தி மக்கள் தொலைகாட்சியில் மட்டும் ஒரளவு செய்தியாக காண்பிக்கப்பட்டது. மற்ற தொலைகாட்சியில் மேற்படி ஏமாற்ற நிகழ்வு வேறும் வரி செய்திகளாக மட்டும் கீழே ஓட விடப் விட்டன. இது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளதா என தெரியவில்லை. ஏழைகள் சீட்டு கம்பெனிகளிடம் ஏமாறுவுது போல் மேத்த படித்த மாணவ மாணவிகள் வேலை முகாம் நடத்தும் வலைதளங்களிடமும் கல்லூரிகளிடமும் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

என்ன செய்வது எல்லாரையும் சந்தேககண் கொண்டு பார்க்க முடியாது தான். பாவம் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள்.

இதை கண்டு கொள்ள வேண்டியவர்கள் கண்களை மூடிக்கொண்டு கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள்.மேற்படி பட்டாதாரிகள் ஓட்டு போடும் வயது உடையவர்கள் என்பதை அரசியல் கட்சிகள் மறந்து விட்டன. தேர்தல் நேரம் எப்படி இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டார்கள் என தெரியவில்லை.

User login

Who's online

There are currently 1 user and 26 guests online.

Online users

Syndicate

Syndicate content