உலக மயமாக்கலும் நானும்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் 10 வது வகுப்பு படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் அரசு பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்தது. ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்களை இலகுவாக்கி இந்தியாவை உலகிற்கு திறந்து விட்டது. Foreign Direct Investment எனப்படும் அயல் நாட்டுகாரர்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு வழி வகுத்தது.


