காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன। புரட்சியாளர்கள் எனப்படுவோர் ‘உணர்ச்சியற்ற எந்திரங்கள்’ என்ற அவதூறையும், ‘உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்’ என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகிவிட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:
shakthi242's blog
| கவிதை எங்கள் மூச்சு |

