கவிதை எங்கள் மூச்சு
என்னவள்
செவ்வானம் உன் வதனம் கொஞ்சம் தீட்ட
கார்மேகம் உன் கூந்தலில் கொஞ்சம் சரிய
தேனீர் உன் இதழ்களை கொஞ்சம் ருசிக்க
கவிதை கொஞ்சும் உன்னை எழுத
என் பேனா பிறந்ததடி -
அது என் உயிரை உருக்கி
மைய்யாய் கடைந்த்தடி……………
வாழ்க நீவிர் பல்லாண்டு!
கனவுகளோடும் கற்பனைகளோடும்
காத்திருந்த நாட்களையெல்லாம்
நல்ல கவிதையாக கடத்திவிட்ட
இரு மனங்களின் இடப்பறிமாற்றம்
திருமணமாய் இன்று உருமாற்றம்
வாழ்வில்
ஒருமுறை வரும் இந்த சந்தோசம்
முதல்முறை இவர்களுக்கு இன்று
இறைவன் படைப்பில்
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பு
இங்கே நிறைவேற்றப்படுகிறது இருகரம்
இணைத்து வைக்கப்பட்ட திருமணத்தால்
நிறைவேற்றப்பட்ட தீர்ப்பில்
இராமனுக்கு அணில்போல
என் பங்கும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது
இவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வதனால்
வாழ்த்துகளை வார்த்தைகளாய் கூறினால்
கேட்கப்படும்போதே…..
மறக்கப்பட்டுவிடும் என்பதால்
வாசகங்களாய் பதிப்பித்து தருகிறேன்
வாழ்க நீவிர் பல்லாண்டு!
ftpijfs; vd;dhy;jhNd vOjpdha; vd;W ngUik
ftpijfs;
vd;dhy;jhNd vOjpdha;
vd;W
ngUik Ngrpf; nfhz;lJ
vd; Ngdh.
mjw;nfg;gbj; njhpAk;
ehd;
cd;dhy;jhd; vOjpNdd;
vdgJ.
**Akka**
Maanida pirappil eraivan poodda koolam
En vaalvil oor alangkoolam…
Evulagil uravukkaaka aangum oru jeevanin 20 varuda pulampal………..kodupathil *vallavan*..padaipathil…*kechan*..nadi..eraivan..”En anbuk kum..panbuk kum thaai koduthan..arivuk kum..valar chik kum thanthai koduthan…uravuk kum kaavaluk kum thambik koduthan….nantri sonnen en maanam kealvi keadkum varai…poobol virintha en vaalvil..puyal kudi konda thadi..
*Manam*..”adi kalli thaai koduthavan..thantahi koduthavan..thambi koduthavan….*akka*koduk ka marathan nadi..antha *kilavan*…athad kadi nantri”….naano poodi muddal antren siritha padi……..
“Kalutahai ku theriuma kadpuura vasanai.. oru naal aanguvai antha uravuk kaaka.. antrathu manam……Sakkarai pooda veendum manathuk ku.. athan sol mugartham palitha tadi…kealungal manakumaralai..
**Ealuthu pilaiyai kandu thalai el kodda oor urava ellai…*Veeddu tinnai el amarenthu pallang kuli vilaiyaada oor uravu ellai…*Thanthai en muddha thai pankkida oor uravu ellai…En palli paruvam varai………
**En pallik kathaiyai naal mulukka pulambi tallah oor uravu ellai..*Vaetru valiyal thudik kum poluthu oodi vanthu enthadi kasaayam antru thara oor urvu ellai..*En paavadai thaavanik ku sandai pooda oor uravu ellai….En paruva vayathu varai….
*Adutha veedin kaadhal kathai yai oddukkeakka oor uravu ellai….*Ennudan sear inthu vidalai paiyanai kadalai pooda oor uravu ellai…*Oru joodi kammalukkaaka kadai theruvil moothik kolla oor uravu ellai….En ellamai paruvam varai..
*Ethanai muthana visayangal en vaalvil ellai yadi kanmani..eanakku sorkathin vaasaladi antha uravu..*akka* antru vaaividdu alaikka en ethaiyam thudikku thadi..*Nantriyai poomalaiyaaka suudiya entha naa eraivanai thuutriya thu…
“Antha” sathikkaarnin vilaiyaddu purintha tadi entru enakku…
*Kidaitha uravukalai uthari thalli kalluri vaasalai naadi sentra tadi en kaalkal…*uravukalai pirintha thuyarathil en kankal thathalitha tadi….**”Alaathee thangaiyee naan erukken unakku.. micham vathuk kol un kanniirai ennum pirivukalai santhipai”**…
*Kanneerai thudaitu nimirinthu paarthen… theedineen…antha kurailai kaane… nantri solvathdku ellai ..ennai…*thangaiyentru alaitha antha jeevanai kaane…*En anbu pasiyai thiirka vanthathu pool aval mugam..oodi sentrui aravanaithu kondeen..eni vida maaden..
*Aayulvarai ennai thangaiyentru alaika….ellai..elai!!!..*akka*antru naan alaikka eraivan kodutha uravu..*thaaien aravanipil kaanatha sugam unnidam kandeen…*Eraivaa…aduta jeenmam erunthal evalea enakku akkavaka pirakkkad dum antru keekka maadden..aan theriyuma..7 jeenmathin anbaiyum entha piravi el enakku kidaithu viddathu…*Eval…varavaal…uraval…
நிலவுப் பெண்ணே…
வெள்ளை நிலவே! எந்தன் மனதை
கொள்ளை செய்தாயே; முகில் கூட்டத்தில்
பள்ளி கொண்டாயே; விழிக்கு குளுமையும்
உள்ளத்தில் மகிழ்வும் ஈந்தாயே; வானத்தாயே.
திங்களே! உனக்கோர் திங்களில் இருபிறையாம்;
அங்கம் குறுகி, பெருகி, விண்ணிடை
பாங்காய் பவனி வந்தே எவரும்
ஏங்கும் வண்ணம் எழில் பெற்றாயே.
மறைகள் ஓதும் மலைமேல் உறைவோன்
பிறைநுதல் அணிந்து அகம் மகிழ்ந்தான்.
குறைவற்ற நீயோ மாதமோர் நாளில்
மறைந்து போவதன் மர்மம் என்னவோ?
ஆதவன் அன்றாடம் அடங்கும் இடத்தே
புதுமணப் பெண்ணாய், புதிராய் வருகிறாய்;
மாதம், வருடம், யுகமென மாறிடினும்
கதறும் குழந்தைக்கு நல்விருந்தாய் அமைகிறாய்.
முழுமதி ஆகிநீ வானப் பல்லக்கில்
எழுகின்ற போதுன் வனப்பு கூடுதே!
சூழும் மேகம் மகுடமாய் விளங்குதே!
பழுதிலா உனதழகை பருகியது இவ்வுலகே.
- வை.அண்ணாஸாமி -
***
கவிதைகளை தமிழில் வழங்குங்கள். ஆங்கிலத்தில் எழுதப்படும் கவிதைகள் நீக்கப்படும். - இணைய நிருவாகம்.
CUTE KAVITHAI :
“Oru nimidam kuda ennai vittu piriyathey,
en alagirku paathukaapu illai”, Endru Mullidam Kenjiyathu “ROJA”.
உபத்திர உபாயாசி
தன் நண்பர் மகன்
என்னை விட அதிக மார்க்
வாங்குகிறானென்று
அங்கலாய்த்துக்கொண்ட
என் தந்தைக்குச்சொன்னேன்
என் தந்தையை விட
அவன் தந்தைக்கு
அறிவதிகமென்று,
நன்றாய் படிக்கும்
ஒருவனைக்காட்டி
இவனைப்பார்த்தாவது
திருந்தச்சொன்ன
ஆசிரியரிடம் கேட்டேன்
ஐந்தாம் வகுப்பை விட்டு
நீங்கள் கடக்க
யாரைப்பார்த்து
திருந்தவேண்டுமென்று,
சாலையில் வாகனத்தில்
ஒருத்தியுடன் செல்லும்
ஒருவனைப்பார்த்து
அதைப்போல் நீயும்
செல்லவேண்டுமென்று கூறிய
காதலியிடம் சொன்னேன்
வாகனத்தை நான்
பார்த்துக்கொள்கிறேன்
உன் தங்கையின் சம்மதத்தை
கேட்டுச்சொல் என்று…
என் வயது தோழர்களை
பார்த்தாவது திருந்தச்சொன்ன
என் தாத்தாவிடம் சொன்னேன்
உங்கள் வயது தோழர்கள்
போய்ச்சேர்ந்துக்கொண்டிருக்கிறார்களென்று,
அடுத்தவீட்டு அலமேலு
புதுச்சேலை கட்டியிருக்கிறாளென்று
புலம்பிக்கொண்டிருந்த
மனைவியிடம் சொன்னேன்
எதிர்வீட்டு பார்வதி
மண்ணெண்ணெய் ஊற்றி
கொளுத்திக்கொண்டாலாமென்று…
உபதேசிகளைக்கண்டால்
உரக்கச்சொல்லுங்கள்
உங்களைக்காட்டிலும்
உயர்ந்தவரொருவர்
உலகில் உள்ளாரென்று.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
Please Post your Comments to mahasin2005@yahoo.co.in
நீ-கவிதை
கவிதைகளை படைப்பவர்கள்
கவிஞர்கள் என்றால்…
உன்னைப் படைத்த உன்
பெற்றோரும் கவிஞர்கள் தானே…
செத்தும் படி
தெருவே கதியென்று கிடந்தால்
நீயும் எவனுக்கோ கணக்கெழுதி
வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்
உங்கப்பாவைபோன்று
என்கிறாள் அம்மா
இப்படியே தொலைக்காட்சியில்
ஜீவனை தொலைத்தால்
எவனும் பொண்ணு தரமாட்டான்
அப்புறம் கெடச்ச ஓட்ட ஒடிசல
வச்சு காலம் தள்ளனும்
என்னை மாதிரி
என்கிறார் அப்பா
ஆகாயத்தில் பறக்கும்
ஒரு விமானத்தைக்காட்டி
நீ அத ஓட்டிட்டு போகணும்
நான் அதுல உக்காந்து வரணும்
என்கிறாள் பட்டி
இப்பிடி புழுதியில ஆடுனா
கம்போண்டரா கூட ஆக முடியாது
நண்பர்களுடன் இருந்தவனை
கதற கதற அலாக்காய் தூக்கி
வீட்டில் சேர்க்கிறார் தாத்தா
மருத்துவத்தை முடித்து
விமான ஓட்டுபவனாகி
பெரிய இடத்துப்பெண்ணை
கைப்பற்றும் வழியை
தன் இரண்டம் வகுப்பு
புத்தக மூட்டைக்குள்
தேடிப்பார்க்கிறான் சிறுவன்.
s.m. Sunaith Hasani
Pls ur Comments to mahasin2005@yahoo.co.in
நிந்தனை செய் மனமே…
எடுத்துச்செல் உன்னோடு
உன் நினைவுகளையும்
பூகம்பம் தின்று தீர்த்தாடி
விட்டுச்சென்ற மிச்சத்தில்
லாபமில்லை.
அம்புலிமாமாவில் மட்டுமே படித்த
ராட்சஸி பெண்ணான கதை
நிஜமாய்ப்போன
அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான்மீள்ந்த பாடில்லை.
உன்னை ராட்சஸியாகவும்
நாதஸ்வர மேளதாளத்தை
ஜனங்களின் கூக்குரலாகவும்
உன் ஆபரணங்களை
ஒட்டியிருக்கும் மாமிசத்துண்டுகளாகவும்
கற்பனை செய்து
ஆறுதல் தேடுகிறேன்.
இருந்தாலும் உணர முடிகிறது
இது காலம் கடந்த ஞானமென்று
உன் மனது முனகும் சப்தத்தை.
இப்பொழுதெல்லாம்
இரவின் இருளோடு
பயமும் சேர்ந்து
என்னை தொற்றிக்கொள்கிறது
உன் நினைவுகளில்
சிக்கி சீரழிந்து போவேனென்று.
அதுவும் குளிர்கால இரவென்பதால்
பயமும் சேர்ந்து நீள்கிறது
அதன் இரவைப்போல்
பகலில்தான் உணர்கிறேன்
இரவே ஆயிரம் மடங்கு மேலென்று.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
அன்னை
அன்னையே….
அகிலத்தில் ஏற்படும் ஆயிரம்
உறவுகளுக்கு முதலுறவாய்
அமைந்தவளே…
என்னை இவ்வுலக வாசிக்க
மாதங்கள் பத்து நீபட்ட
பரதிவிப்பை நானுமறிவேன்.
ஏனைன்றால் உனக்குள்ளிருந்தவள்
நானாயிற்றே தாயே!.
ஆதி முதல் அந்தம் வரை
கற்பித்தவளே…
உனக்காக நானிருப்பேன்
என்றும்!
உயிர்
இன்னும் என்னிடம்
என்னடி எதிர்பார்க்கிறாய்..
உயிர் மட்டும்தான் உள்ளது…
மலர்
மனிதனை மனம்
மலரச்செய்யும் மலரே!
மலருக்கு மணமுண்டென்பதை
யாவருமறிவர்,உனக்கு
மனமும் உண்டென்பதை யாரறிவார்?
அதனால்தான் நீ மனங்கள்
இன்னைய பாலமாகிறாயோ?
அடுத்தமுறை
ஊருக்கு பயணிக்கையில்
உள்மனதில் தோன்றும்..
மார்கழி மாதப்பனியில் விடியல்
மாலைநேர மல்லிகை வாசம்
மலைக்கால தவலைக்குரல்
தென்னை மரநிழலில் தூக்கம்
ஒன்றையும் அனுபவிக்காமல்
திரும்பும்போது தோன்றும்
அடுத்தமுறை
பார்க்கலாமென்று……..
கல்லூரி
காலம் கடந்தாலும்
கல்லூரி வாழ்கை
கசங்கத நிணைவுகலாய்
இன்றும் மனதில்…
காலை சூரியனை
கண்டேய்ராத நாம்.
செமஸ்ட்ரின் போது மட்டும்
விடிந்தும் முழிதிருக்கும்
அந்த நாட்கள்
வார விடுமுறையில்
வீட்டுக்கு சென்றாலும்
வீடுதிக்கு எப்பொது
செல்வொமென்று பறக்கும் மனது..
மாதமொன்றுக்கு முன்னையே..
திட்டமிடும் பிறந்த நாட்கள்..
மணிக்கணிக்கல் அரட்டை..
ஆனால் இன்றோ..
நாலைந்து மாதத்திற்கு
ஒருமுறை ஹாய்..
வருடத்திற்கு ஒரு ஃபோன்..
முடிந்த பிறந்தநாளுக்கு
வாழ்த்துக்கள்…
காலத்தின் வலிமை
என்னவொ….
பிச்சைக்காரன்
நித்தம் வேலைக்கு அலைந்து,
பசியால் வெந்து,
ஊர் திரும்ப காசில்லாமல்,
வெயிலின் கொடுமையால்,
படுத்து மரநிழலில்
கண்மூடினால்…
வெயிலில் கருகிய தலைமுடியும்,
பசியில் ஒட்டிப்போன கன்னங்களும்,
இடுப்பில் நிக்காத பேண்டும்
புதியதோர் வேலையைத்
தேடித்தந்தது…
கண்திறந்தால்
உடல்மேல் சிதறிப்போன
நாணயங்கள்!!!
உண்மையான நட்பு…..
உண்மையான நட்பு….
தாய் குழந்தையை விட்டு பிரிவதில்லை…
தேன் கூண்டை விட்டு பிரிவதில்லை…
மீன் நீரை விட்டு பிரிவதில்லை அதே போல்
உண்மையான நண்பன் என்றுமே
துன்பம் வந்தபோது பிரிவதில்லை…
By
PVM.Prabhu
mprabusms@gmail.com
காதல்…
வில் விழியாள் எய்திய
பார்வை அம்புகள்
என் இதயத்தில் ஏற்படுத்திய
காயத்தின் விளைவாக
என் இரத்தத்தில்
உன் காதல் கலந்தது…
உச்ச உற்ச்சவம்
ஜாதி மத
இன பேதம் பாராதது
உச்சத்தின் சிந்தனை
ஒவ்வொரு பிச்சைக்காரன்
மண்டைக்குள்ளும்
ஒரு அம்பானி நித்தமும்
சோம்பல் முறிக்கிறார்
வீடு தோறும் செய்தித்தாள்
தூவும் சிறுபையன்
சிந்தனைக்குள்ளும் ஒரு உச்சம்
அது இதன் தலையங்கத்தில்
ஒரு நாள் என் பெயர் வரவேண்டுமென்று
தெருவோர நாயர் கடையில் கடனில்
பீடி வலிப்பவருக்கான உச்சம்
சுரண்டல் லாட்டரியில்
ஒரு நாளில் கோடீஸ்வரராவது
கட்சிக்கூட்டத்தின்
கடைக்கோடியில்
கொடிபிடிப்பவன் எண்ணம் கூட
தலைமைச்செயலகமும்
பாராளுமன்றமும்தான்
கும்பலோடு கும்பலாய்
நடிப்பவன் கூட
இப்படித்தான் தன்னை தேற்றுகிறான்
ரஜினியும் கமலும்
முதல் படத்திலேயே ஹீரோவா என்ன!
உச்சம் அடிவானத்தை போன்று
அதன் அருகே சென்றுவிடும்போது
தூரம் இன்னும் அதிகரிக்கும்
உச்சத்தில் இருப்பவன் கூறுகிறான்
இவையனைத்தும்
சிரமப்பட்டு அடைந்ததென்று
இல்லாதவன் அலுத்துக்கொள்கிறான்
எனக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
pls post your comments to mahasin2005@yahoo.co.in
| கவிதை எங்கள் மூச்சு |

